ADDED : அக் 21, 2025 03:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: தேசிய நெடுஞ்சாலை, சவேரியார் பட்டினம் விலக்கில் இருந்து புல்லமடை வழியாக ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் வல்லமடை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது.
இந்த ரோட்டின் மூலம் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த ரோடு தேசிய நெடுஞ்சாலை சவேரியார் பட்டினம் விலக்கிலிருந்து புல்லமடை வரை 2 கி.மீ., ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. லேசான மழை பெய்தாலே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விபத்துகள் நடக்கின்றன. பல ஆண்டுகளாக அப்பகுதி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் ரோடு சீரமைக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.