/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெருநாழியில் பூட்டியுள்ள எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,
/
பெருநாழியில் பூட்டியுள்ள எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,
பெருநாழியில் பூட்டியுள்ள எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,
பெருநாழியில் பூட்டியுள்ள எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,
ADDED : செப் 07, 2025 02:57 AM
பெருநாழி: பெருநாழியில் மூன்று மாதங்களுக்கும் மேலாக எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., பூட்டி வைக்கப்பட்டுள்ளதால் அப்பதி மக்கள், வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர்
பெருநாழியில் எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மற்றும் மற்றொரு தனியார் ஏ.டி.எம்., உள்ளது. இந்நிலையில் எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மூன்று மாதங்களுக்கும் மேலாக பூட்டியே வைத்திருப்பதால் இதனை நம்பியுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் 20 கி.மீ.,ல் சாயல்குடிக்கும் அருகே உள்ள நகரங்களுக்கு வாகனங்களில் சென்றும் பணம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெருநாழியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறிய தாவது:
நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காக பெருநாழி நகர் பகுதிக்கு வந்தால் பூட்டியே வைக்கப்பட்டுள்ள நிலையில் திரும்ப செல்கின்றனர். தொடர் அலைக்கழிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்தினர் ஏ.டி.எம்., இயந்திரத்தை பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.