/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க திட்டம்
/
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க திட்டம்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க திட்டம்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க திட்டம்
ADDED : பிப் 15, 2024 05:03 AM
திருவாடானை: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அரசு தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூறினார். அவர் கூறியதாவது:
திருவாடானை அருகே செங்காலன் வயல் அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் மாலையில் வகுப்பு நடந்து கொண்டிருந்த போது பாம்பு புகுந்தது. இதையடுத்து அனைத்து அரசு பள்ளிகளைச் சுற்றிலும் உள்ள முட்புதர்களை அகற்ற ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை இப்போதே அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தவும், அரசுப் பள்ளிகளில் படிப்பதன் அவசியம் குறித்து விளக்கவும், பள்ளி ஆசிரியர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பெற்றோரை சந்திக்க கூறப்பட்டுள்ளது.
அரசு தொடக்கப்பள்ளிகளில் தற்போது மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
தொடக்கப்பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு, நடுநிலைப்பள்ளிகளுக்கு ைஹடெக் லேப் வசதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் மூலம் கிராம மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட கல்வி கிடைக்கும் என்றார்.

