நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் :   முதுகுளத்துார் கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.சேர்மன் காந்திராசு தலைமை வகித்தார். தாளாளர் சந்திரசேகரன், தனியார் பள்ளி டி.இ.ஓ., ரவி, டி.எஸ்.பி., சின்னக்கண்ணு முன்னிலை வகித்தனர். முதல்வர் அடலின் லீமா வரவேற்றார்.
மாணவர்களின் நடனம், சிலம்பம்,யோகா, பிரமிடு, பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விளையாட்டு போட்டிகள், பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
சோனைமீனாள் கலை அறிவியல் கல்லுாரி சேர்மன் அசோக்குமார், ஆலோசகர் பத்மநாபன், முன்னாள் ஆசிரியர் துரைப்பாண்டியன் கலந்து கொண்டனர்.

