நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள கலைவாணி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். கல்வியாளர் சாந்தினி வரவேற்றார். ஆண்டறிக்கையை முதல்வர் சுகன்யா தேவி வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக காவிரி குடிநீர் உதவி பொறியாளர் ராஜ்குமார் பங்கேற்று ஆரோக்கியமும், கல்வியும் என்ற தலைப்பில் பேசினார்.
விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு டாக்டர் சந்திரசேகர் பரிசு வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியைகள் கலைச்செல்வி, சுகன்யா செய்தனர். யோகா, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

