நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி, : பரமக்குடி அருகே கமுதக்குடியில் செயல்படும் மவுண்ட் லிட்ரா ஜி பள்ளியில் 9 வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி சேர்மன் பூமிநாதன் தலைமை வகித்தார்.
முதல்வர் வெங்கடேஷ் ஆண்டறிக்கை வாசித்து வரவேற்றார்.
ராமநாதபுரம் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் நாகேந்திரன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
துணை சேர்மன் அரிவாசுதேவன், துணை செயலாளர் உதயகுமார் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பொருளாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.