ADDED : மார் 04, 2024 05:00 AM

அ நிறம் | அளவு
பாம்பன்: பாம்பன் அருகேயுள்ள சின்னப்பாலம் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
கிராமத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். ஆசிரியை ஞானசவுந்தரி வரவேற்றார். பள்ளியின் தலைமையாசிரியை செல்லம்மாள் ஆண்டறிக்கை வாசித்தார். இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் லியோன் வாழ்த்தினார்.
கல்வியாண்டின் சிறந்த மாணவருக்காவ பரிசு நர்மதாவுக்கு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி முத்துமாரி, பாம்பன் ஊராட்சி வார்டு உறுப்பினர் பாண்டியம்மாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் முருகேசன், கிராம செயலாளர் செல்வம், இளைஞர் மன்றத்தலைவர் தமிழ், மகளிர் மன்றத்தலைவி முனியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர். ஆசிரியை ஆரோக்கிய ரீகா நன்றி கூறினார். ----------
