ADDED : மார் 06, 2024 06:50 AM

அ நிறம் | அளவு
பரமக்குடி : -பரமக்குடி புதுநகரில் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் முகைதீன் முசாபர் அலி தலைமை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, கல்வித்துறை அலுவலர் பெர்க்மான்ஸ் டேவிட், வாசன் மெட்ரிக் பள்ளி சேர்மன் வாசன், ஜெய்னுல் ஆலம் முன்னிலை வகித்தனர்.
நவாஸ்கனி எம்.பி., கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசளித்து பேசினார்.
தொடர்ந்து மாணவர்கள் அபாகஸ், யோகா, கராத்தே, சிலம்பம், ஜூடோ மற்றும் ஜிம்னாஸ்டிக் போன்றவற்றில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி முதல்வர்கள் அணில்(செகண்டரி) மற்றும் ஜெயசுதா(பிரைமரி) ஆண்டறிக்கை வாசித்தனர்.
