
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி நிறுவனர் வாசன் தலைமை வகித்தார். தாளாளர் உமா வாசன் முன்னிலை வகித்தார். செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.
முதல்வர் மகாதேவன் ஆண்டறிக்கை வாசித்தார். அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா பங்கேற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்து பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

