ADDED : ஜன 29, 2026 05:23 AM

அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 42வது விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது. ஆயிர வைசிய சபை தலைவர் பாலுச்சாமி தலைமை வகித்தார். இணைத்தலைவர் போஸ் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் முருகானந்தம் வரவேற்றார். செயலாளர் ராஜேஷ்கண்ணன், முதல்வர் ஜெயபிரமிளா ஆண்டறிக்கை வாசித்தார். உடற்கல்வி ஆசிரியர் சரவணகுமார் விளையாட்டு அறிக்கை வாசித்தார்.
சபை செயலாளர்கள் லெனின்குமார், சதீஷ் குமார், பொருளாளர் சுப்பிரமணியன், பள்ளி இணைச்செயலாளர் பிரசன்னா, பள்ளி துணை முதல்வர் ராஜேந்திரன் வாழ்த்தினர். பள்ளி நிர்வாக மேலாளர் சதீஷ் நன்றி கூறினார்.
