நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் எம்.எஸ்.கே.நகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் சூசை, தமிழரசி தலைமை வகித்தனர். பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர். நகராட்சி தலைவர் கார்மேகம் மாணவர்களுக்கு கராத்தே சீருடை வழங்கினார். தலைமையாசிரியர் பொன்னுச்சாமி ஏற்பாடுகளை செய்தார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் சோபனா, நகராட்சி கவுன்சிலர்கள் முகமது ஜஹாங்கீர், மெஹர் பானு, காதர் பிச்சை, முன்னாள் கவுன்சிலர் ஆரிப் ராஜா, உம்முல் மெஹராஜ், பள்ளி கொடையாளர் அசல் அலியார், ஆசிரியர்கள் ஈஸ்வர வேலு, வளர்மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

