ADDED : பிப் 19, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியை அலமேலுமங்கை தலைமை வகித்தார்.
வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரவீந்திரன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். வார்டு கவுன்சிலர் சரண்யா, முன்னாள் கவுன்சிலர் கந்தசாமி, டாக்டர் ராமநாதன் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
