ADDED : மார் 17, 2026 05:11 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகர் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் செய்யது சுலைமான் முன்னிலை வகித்தார். முதல்வர் சாந்தினி வரவேற்றார். துணை முதல்வர் சுகன்யா தேவி ஆண்டறிக்கை வாசித்தார். தணிக்கை துறை உதவி இயக்குனர் செல்வ பூபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ஜேக்கப் பங்கேற்று பேசினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கல்வி, விளையாட்டுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
