ADDED : மார் 25, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி: சாயல்குடி வடக்கு நரிப்பையூர் பாரதமாதா உயர்நிலைப்பள்ளி 70ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கிராமத் தலைவர் வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தார். கிராம அம்பலம் சுப்பையா முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் கதிரேசன் வரவேற்றார். பாரதமாதா கல்வி குழு தலைவர் முருகன், செயலாளர் மூர்த்தி, தொழிலதிபர் குமார், காரண மறவர் சங்கத் தலைவர் சுந்தர கணபதி, சாயல்குடி இன்ஸ்பெக்டர் அன்ன ராஜ், பூபதி பங்கேற்றனர். ஏற்பாடுகளை வடக்கு நரிப்பையூர் பாரத மாதா உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் செய்தனர்.
