ADDED : ஏப் 06, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: பனைக்குளம் முகமது யூசுப் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார சுகாதார ஆய்வாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். தாளாளர் நுாருல் கரீம் வரவேற்றார். முதல்வர் ஜுரைதா பர்வீன், ஆசிரியை லாவண்யா ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர்.
சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலை கல்வியியல் துறை தலைவர் முத்துச்சாமி கலந்து கொண்டு பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
