ADDED : ஏப் 26, 2026 04:34 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை:கீழக்கரை கோக்கா அகமது தெருவில் உள்ள நியூவே டேக்கேர் மல்லையர் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ராசிக்தீன் தலைமை வகித்தார்.
கீழக்கரை தொழிலதிபர் சேக் உசேன் முன்னிலை வகித்தார். மின்ஹாஜ் பள்ளி நிர்வாகி ரமீஸ்கான், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. யாஸ்மின் ஆப்ரின் நன்றி கூறினார்.
