/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் நிதியின்றி பள்ளி நுகர்வோர் மன்றம் முடக்கம்
/
ராமநாதபுரத்தில் நிதியின்றி பள்ளி நுகர்வோர் மன்றம் முடக்கம்
ராமநாதபுரத்தில் நிதியின்றி பள்ளி நுகர்வோர் மன்றம் முடக்கம்
ராமநாதபுரத்தில் நிதியின்றி பள்ளி நுகர்வோர் மன்றம் முடக்கம்
ADDED : மே 28, 2025 11:14 PM
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதியின்றி பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் முடங்கியிருப்பதாக ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்கத்தினர் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது :
1983 முதல் அரசின் நலத்திட்டம், நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்கம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 2006--07ல் அப்போதைய தமிழக அரசு இந்தியாவிற்கு முன்னோடியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 'பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம்' எனும் திட்டத்தை துவக்கியது.
இதற்கு தேவையான நிதி, வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு உணவு பொது வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வழங்கியது. ஓராண்டுக்கு ஒரு பள்ளிக்கு ரூ.8000ம், அந்தந்த பகுதியில் உள்ள நுகர்வோர் இயக்கத்திற்கு ரூ.2000 வழங்கப்பட்டது.
இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் சமூக தொடர்பு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்ட நிலையில், அடுத்த இரு ஆண்டுகளுக்கு பின் நிதி வழங்காமல் அரசு முட்டுக்கட்டை போட்டதால் இத்திட்டமும் பள்ளிகளில் பெயரளவில் மட்டுமே உள்ளது.
முடங்கி கிடக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தி மாணவர்கள், மக்களிடம் நுகர்வோர் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

