/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்வு எழுதியும் 'ஆப்சென்ட்' மாணவியின் பெற்றோர் புகார்; பள்ளிக் கல்வித்துறை மறுப்பு

ADDED : ஆக 05, 2025 04:31 AM
ராமநாதபுரம்: பத்தாம் வகுப்பு தனித்தேர்வாக அறிவியல் பாடம் எழுதியும் மதிப்பெண் பட்டியலில் ஆப்சென்ட் ஆக்கியுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் சல்லிமலை கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் மனைவி லட்சுமி. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதில் தனது மகள் ஸ்ரீ ஐஸ்வர்யா தனித்தேர்வாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் அறிவியல் தேர்வு எழுதி 100க்கு 10 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இருந்தும் மதிப்பெண் பட்டியலில் ஆப்சென்ட் என குறிப்பிட்டுள்ளனர். இதற்கு அதிகாரிகள் நல்ல தீர்வு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூறுகையில், மாணவி பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக ஆப்சென்ட் ஆகியுள்ளார். இதில் தவறு எதுவுமில்லை.
சம்பந்தபட்ட தேர்வு எழுதிய பள்ளியில் விசாரித்து மாணவி செய்முறை தேர்வு எழுதுவதற்கு உதவி செய்யப்படும் என்றார்.