ADDED : மார் 24, 2026 05:01 AM
அ நிறம் | அளவு
நயினார்கோவில்: -: நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் ஆரம்பகோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1926ல் துவக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நுாற்றாண்டு விழா கொண்டாடினர்.
அனைவரும் ஒன்றிணைந்து பள்ளிக்கு தேவையான சேர்கள், குடம் மற்றும் கடிகாரம் உள்ளிட்ட தேவையான உபகரணங்களை வழங்கினர்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
