/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி மாணவர் தனித்திறன் படைப்புகள் கண்காட்சி
/
பள்ளி மாணவர் தனித்திறன் படைப்புகள் கண்காட்சி
ADDED : ஜன 27, 2025 05:18 AM

முதுகுளத்தூர் : முதுகுளத்துார் அருகே சாம்பக்குளம் கவினா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.சி., பள்ளியில் மாணவர்களின் தனித் திறமைகள், படைப்புகள் குறித்த கண்காட்சி நடந்தது.
பள்ளியின் தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். தாளாளர் ஹேமலதா முன்னிலை வகித்தார். பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் பத்மபிரியா, இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் கண்காட்சியை துவக்கி வைத்தனர். மாணவர்கள் தங்கள் எதிர்கால லட்சியங்களை வெளிப்படுத்தும் விதமாக மருத்துவராக,கலைத்துறை ஆராய்ச்சியாளராக, அறிவியல் கண்டுபிடிப்பாளராக, தமிழ் அறிஞர்கள் என பல்வேறு விதமான படைப்புகள் அமைத்து இருந்தன.
சிறந்த படைப்பிற்குரிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கம்பு,சோளம் குதிரைவாலி உள்ளிட்ட இயற்கை தானியங்கள் மூலம் செய்த உணவுகள் வழங்கப்பட்டு அதன் பயன்கள் குறித்து விளக்கினர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

