/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலோர காவல் படை செயல்பாடு பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
/
கடலோர காவல் படை செயல்பாடு பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
கடலோர காவல் படை செயல்பாடு பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
கடலோர காவல் படை செயல்பாடு பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
ADDED : மார் 05, 2026 05:34 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள், கடலோர காவல் படையின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக மண்டபம் கடலோர காவல் படை நிலையத்திற்கு ஒரு நாள் பயிற்சியாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களுக்கு அங்குள்ள அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கடலோர ரோந்து வாகனங்கள், நவீன ரோந்து படகுகள் உள்ளிட்டவைகளின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டன.
கடலோர காவல் படையினரின் ரோந்து பணிகள் குறித்தும், கடல் வழி கடத்தல், ஊடுருவல், சட்டவிரோத மீன்பிடிப்பு உள்ளிட்ட நேரங்களில் கடலோர காவல் படையின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன.
தொடர்ந்து மாணவர்களும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் கடலோர பாதுகாப்பில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என கடலோர காவல் படை வீரர்கள் மாணவர்களிடம் வலியுறுத்தினர்.

