ADDED : மார் 20, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே பண்ணவயல் அரசு நடு நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் தமிழரசி, திருவாடானை அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கதிரவன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
