/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண்கள் கல்லுாரியில் அறிவியல் கண்காட்சி
/
பெண்கள் கல்லுாரியில் அறிவியல் கண்காட்சி
ADDED : ஜன 10, 2025 04:55 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் உள்ள அன்னை ஸ்கொலாஸ்டிகா பெண்கள் கல்லுாரியில் அறிவியல், புத்தகக் கண்காட்சி நடந்தது.
அன்னை ஸ்கொலாஸ்டிகா கல்லுாரியில் நடந்த அறிவியல், புத்தக கண்காட்சிக்கு கல்லுாரி செயலாளர் ரூபி தலைமை வகித்தார். ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் துவக்கி வைத்தார். கண்காட்சியில் சுற்றுச்சூழல், பாலிதீன் பை, கப்களால் ஏற்படும் பாதிப்புகள், விவசாயம், குடிநீர் சேமிப்பு குறித்தும்,
சூரிய குடும்பத்தை
தத்ரூபமாக கல்லுாரி மாணவிகள் வடிவமைத்து இருந்தது அனைவரையும் கவர்ந்தது.
கண்காட்சியை ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் உள்ள பள்ளி மாணவிகள் ஏராளமானோர் பார்வையிட்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை எமல்டா ராணி உட்பட கல்லுாரி விரிவுரையாளர்கள் செய்திருந்தனர்.