ADDED : மார் 02, 2024 11:50 PM

அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
பள்ளி நிறுவனர் காந்திராசு தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் லியோன், துணைத்தலைவர் நவனீதகிருஷ்ணன்,வட்டார செயலாளர் துரைப்பாண்டியன், விளங்குளத்தூர் பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியதாஸ் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஆடலின் லீமா வரவேற்றார்.
மாணவர்கள் அறிவியல்படைப்புகள் செய்து வந்து விளக்கினர். மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர் தமயந்தி நன்றி கூறினார்.
