நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. தாளாளர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார்.
தலைமையாசிரியர் முகமது சுல்தான் அலாவுதீன், ஜமாத் தலைவர் காதர் முகைதீன், கல்விக் குழு தலைவர் செய்யது மூமின் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் அறிவியல் படைப்புகள் செய்து விளக்கினர். சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
உதவி தலைமை ஆசிரியர்கள் காஜா நிஜாமுதீன் குரைசி, ஜாகிர்உசேன், நவ்ரோஸ் பானு உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர் கலந்து கொண்டனர்.

