/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாடு: நிர்வாகக்குழு தேர்வு
/
அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாடு: நிர்வாகக்குழு தேர்வு
அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாடு: நிர்வாகக்குழு தேர்வு
அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாடு: நிர்வாகக்குழு தேர்வு
ADDED : ஜன 02, 2026 05:26 AM
ராமநாதபுரம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 18வது மாவட்ட மாநாடு 'அறிவியலை அறிவோம் அறிவியலால் இணைவோம்,' என்ற தலைப்பில் ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் நடந்தது.
மாநாட்டிற்கு இயக்க மாவட்ட தலைவர் லியோன் தலைமை வகித்தார். சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரி தாளாளர் மனோகரன் மார்டின், முதல்வர் ஆனந்த், ராமநாதபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2ம் அமர்வு மாவட்ட துணைச் செயலாளர் சசிக்குமார் தலைமை வகித்தார்.
அறிவியலை அறிவோம், அறிவியலால் இணைவோம் என்ற தலைப்பில் இயக்க மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்துரை வழங்கினார். நான்காம் அமர்வில் பிரதிநிதிகள் மாநாடு நடந்தது.
மாவட்டச் செயலாளர் காந்தி செயலறிக்கை வழங்கினார். புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்தனர்.
மாவட்ட தலைவராக லியோன், செயலாளராக ஜீவானந்தம், பொருளாளராக சாகுல் மீரா தேர்வு செய்யப்பட்டனர்.