/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடத்தல் பொருட்களை மீட்க 'ஸ்கூபா டைவிங்' பயிற்சி
/
கடத்தல் பொருட்களை மீட்க 'ஸ்கூபா டைவிங்' பயிற்சி
ADDED : செப் 23, 2024 02:34 AM

ராமநாதபுரம்: கடலில் வீசப்படும் கடத்தல் பொருட்களை மீட்க, கடல்வாழ் உயிரினங்களை வேட்டைக்காரர்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு ராமேஸ்வரத்தில் வனத்துறை, மரைன் போலீசாருக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில், ராமேஸ்வரம் அருகே அக்காள் மடம் கடற்கரையில் கடல் சார் உயர் இலக்குப் படையினர், மரைன் போலீசாருக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சி வழங்கப்பட்டது. கடலுக்கு அடியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள், கடலுக்கு அடியில் ஆராய்ச்சி, கடல் வாழ் உயிரினங்களின் கணக்கெடுப்பு, அவற்றின் கடத்தலை தடுப்பதற்கு நீருக்கடியில் பணித்திறன்களை மேம்படுத்துவதற்கு பயிற்சி வழங்கப்பட்டது.
சென்னை ப்ரோ ஸ்கூபா டைவிங் அகாடமி நிபுணர் அரவிந்த் தருண்ஸ்ரீ இதனை வழங்கினார். வனத்துறையில் 15 பேர், மரைன் போலீசார் 10 பேர் பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சியில் வன சரகர்கள் பாலமுருகன், செல்வம், வனவர்கள் கிருபானந்தகுமார், ரவிக்குமார் பங்கேற்றனர்.வன உயிரின காப்பாளர் பகான் ஜெக்தீஸ் சுதாகர் தெரிவித்ததாவது''
ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்றவர்கள் அவசர நிலை நடவடிக்கைகள், கடல் வாழ் உரியினங்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றார்.
பயிற்சியாளர் அரவிந்த் தருண்ஸ்ரீ கூறுகையில்'' கடத்தல் பொருட்களை தேடுவது, உயிரினங்களை பாதுகாப்பது, கடலில் மூழ்கிய படகுகளை மீட்பது போன்ற பணிகளை அச்சமின்றி கடலுக்கு அடியில் இயல்பாக செய்வதற்கு செப்., 18 முதல் 22 வரை பயிற்சி வழங்கப்பட்டது ''என்றார்.