/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்டபத்தில் கடல் அட்டை பறிமுதல்: கைது 2
/
மண்டபத்தில் கடல் அட்டை பறிமுதல்: கைது 2
ADDED : ஜூலை 10, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: மண்டபம் தெற்கு கடற்கரையில் ரோந்து சென்ற இந்திய கடலோர காவல் படை வீரர்கள் அங்கு சந்தேகத்திற்கிடமான இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ கடல் அட்டை இருந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் மண்டபம் ேஷக் அப்துல் காதர் 50, ராமர் 25, என தெரிந்தது. இந்த கடல் அட்டைகளை மறைவான இடத்தில் காயவைத்து கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 25 ஆயிரம்.
பறிமுதல் செய்த கடல் அட்டை, கடத்தல்காரர்கள் இருவரையும் மண்டபம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இவர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.