/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிடப்பில் கடல்பாசி உலர் தள கட்டட பணிகள்: தொண்டி மீனவர்கள் பாதிப்பு
/
கிடப்பில் கடல்பாசி உலர் தள கட்டட பணிகள்: தொண்டி மீனவர்கள் பாதிப்பு
கிடப்பில் கடல்பாசி உலர் தள கட்டட பணிகள்: தொண்டி மீனவர்கள் பாதிப்பு
கிடப்பில் கடல்பாசி உலர் தள கட்டட பணிகள்: தொண்டி மீனவர்கள் பாதிப்பு
ADDED : மே 14, 2025 12:43 AM

தொண்டி : கடல் பாசிகளை உலர வைப்பதற்காக தளம் மற்றும் கட்டட பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாசிகளை உலரவைக்க முடியாமல் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டி, சோலியக்குடி, எம்.ஆர்.பட்டினம் போன்ற பல்வேறு பகுதிகளில் மீனவப் பெண்கள் செயற்கை முறையில் கடல்பாசி வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்த பாசிகளை வெயிலில் காயவைத்து குறிப்பிட்ட நாட்களுக்கு பின் மூடையாக கட்டி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யபடுகிறது. இதனால் மீனவப் பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.
கடல் பாசிகளைப் பதனிடுவதற்கு முன் அவற்றின் ஈரப்பதத்தை குறைப்பதற்காக உலர் தளத்தில் உலர வைக்கப்படுகின்றன. அறுவடை செய்யப்பட்ட கடல் பாசிகளை சேகரித்து பின்னர் பதனிடுவதற்கு உலர் தளம் உதவுகிறது.
தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினத்தில் உலர்தளம் மற்றும் கடல்பாசிகளை பாதுகாக்கும் வகையில் கட்டடம் கட்டும் பணி துவங்கியது. ஆனால் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், உலர்தள வசதியின்றி அறுவடை செய்த பாசிகள் பாதுகாப்பு இல்லாமல் மூடி வைக்கபட்டுள்ளது. எனவே கிடப்பில் உள்ள உலர்தள கட்டட பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.