/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைக்காக காத்திருக்கும் கடலாடி விவசாயிகள்
/
மழைக்காக காத்திருக்கும் கடலாடி விவசாயிகள்
ADDED : நவ 15, 2024 06:46 AM
கடலாடி: கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் எதிர்பார்த்த பருவமழை இல்லாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட 46 வருவாய் கிராமங்களில் பெருவாரியாக நெல் விவசாயம், அடுத்தபடியாக மிளகாய், பருத்தி, நிலக்கடலை மற்ற சிறு குறு தானியங்கள் உள்ளிட்டவைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.
ஒரு மாதத்திற்கு முன்பு வயல்களில் நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நேரத்தில் மழை இல்லாததால் குறைவான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
எஸ்.எம்.இலந்தைகுளத்தைச் சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி கூறியதாவது:
நடப்பாண்டில் குறைவான மழைப்பொழிவு உள்ளது. இதை நம்பி ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் விவசாயிகள் செலவு செய்துள்ளனர். பெருவாரியான நீர்நிலைகள் மற்றும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை. பருவ மழையை நம்பி காத்திருக்கிறோம். தற்போது அதிகளவு பயிர் காப்பீடு செய்வதற்காக விவசாயிகள் வி.ஏ.ஓ., அலுவலகங்களை தேடி வருகின்றனர்.