/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.127.71 கோடியில் கடல்பாசி பூங்கா: 60 சதவீத பணிகள் நிறைவு
/
ரூ.127.71 கோடியில் கடல்பாசி பூங்கா: 60 சதவீத பணிகள் நிறைவு
ரூ.127.71 கோடியில் கடல்பாசி பூங்கா: 60 சதவீத பணிகள் நிறைவு
ரூ.127.71 கோடியில் கடல்பாசி பூங்கா: 60 சதவீத பணிகள் நிறைவு
ADDED : ஏப் 24, 2025 06:48 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் மீன் வள மேம்பாட்டுத்துறைசார்பில் வளமாவூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள கடல் பாசி பூங்காவில் 60 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஜூலை 2025 ல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
மத்திய அரசின் மீன் வள மேம்பாட்டுத்துறை சார்பில் திருப்பாலைக்குடி அருகே வளமாவூர் பகுதியில் கடல் பாசி பூங்கா அமைக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் மத்திய அரசு ரூ.78.77 கோடியும், தமிழக அரசு ரூ.48.94 கோடியும் பங்களித்துள்ளன.
இத்திட்டத்திற்கு 2023 செப்.,2 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான பணிகள் 2024 ஜன., மாதம் துவங்கியது.
கடல் பாசி விதைகள் உற்பத்தி மையம் அமைப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளான ஆய்வகம், உலர்களம், நடை மேடைகள், பயிற்சி மையம், கோடவுன் போன்றவற்றிற்கான கட்டுமானப் பணிகள் வளமாவூர் பகுதியில் ரூ.34 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் விதை பாசிகள் வீரியமிக்கவையாக இருக்கும். இவை ராமநாதபுரம் மாவட்ட மீனவ மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டு கடல் பாசி உற்பத்தி செய்யப்படவுள்ளது.
கடல்பாசி பதப்படுத்தும் மையங்கள் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ளன.
கடல் பாசி பூங்காவில் கடல் பாசி குறித்த ஆராய்ச்சி மையமும், மகளிர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமும் செயல்படும். மீன் வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத் கூறுகையில், வளமாவூர் கடல் பாசி பூங்கா பணிகள் 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.
முழுமையாக பணிகள் நிறைவு பெற்றுஜூலையில் பயன்பாட்டிற்கு வரும். இதில் 49 ஆயிரம் டன் கடல்பாசி விதைகள் உற்பத்தி செய்யப்படும் என்றார்.

