ADDED : ஜன 13, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலி யுறுத்தி இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு 8வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜன.,5 முதல் மாவட்ட பொருளாளர் தினேஷ்குமார் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. ஆசிரியர்களை வேலையை புறக்கணித்து 8 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
