ADDED : பிப் 27, 2024 08:16 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர்அலுவலகம் அருகே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துச்சாமி தலைமை வகித்தார். தலைவர் தினேஷ்குமார், பொருளாளர் வினோத்பாபு முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் 20ஆயிரம் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பிப்.19 முதல் தொடர் முற்றுகைப் போராட்டம் செய்த ஆசிரியர்களை கைது செய்ததைகண்டிக்கிறோம். அவர்களை விடுவிக்க வேண்டும்.
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இயக்க நிர்வாகிகள், ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
