/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபைக்கு செயலாளர் தேர்வு
/
ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபைக்கு செயலாளர் தேர்வு
ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபைக்கு செயலாளர் தேர்வு
ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபைக்கு செயலாளர் தேர்வு
ADDED : அக் 31, 2025 12:18 AM

கீழக்கரை:  ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபைக்கு புதிய செயலாளர் தேர்வு செய்யப்பட்டார். ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் தலைவர் அஹமது இப்ராஹிம் லெவ்வை கூறியதாவது:
ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் செயலாளராக உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிமன்ற ஆணையரால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்த சித்திக் லெவ்வை அக்.,16ல் காலமானார். இதனைத் தொடர்ந்து ஏர்வாடி தர்கா நிர்வாகத்தின் சமரச திட்ட விதிகளுக்கு இணங்க நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க மூன்றாம் கிளை அங்கத்தினர்கள் மூலம் பொதுக் குழு கூட்டப்பட்டது.
இதில் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் உறுப்பினராக செயல்பட்டு வந்த ஜாஹிர் ஹுஸைன் லெல்வை செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி மவுலவி ஸலாஹுதீன் பாசில் உமரி முன்னிலையில் தர்கா வளாகத்தில் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது என்றார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட செயலாளர் ஜாஹிர் ஹுஸைன் லெவ்வையை, தலைவர் அஹமது இப்ராஹிம், உதவி தலைவர் முகமது சுல்தான், ஹாஜி செய்யது ஹுஸைன், அம்ஜத் ஹுஸைன் மற்றும் ஹக்தார் நிர்வாக சபையினர் பாராட்டினர்.

