/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி சுற்றுவட்டாரத்தில் மழை இல்லாததால் விதை நெல் தேக்கம்
/
கடலாடி சுற்றுவட்டாரத்தில் மழை இல்லாததால் விதை நெல் தேக்கம்
கடலாடி சுற்றுவட்டாரத்தில் மழை இல்லாததால் விதை நெல் தேக்கம்
கடலாடி சுற்றுவட்டாரத்தில் மழை இல்லாததால் விதை நெல் தேக்கம்
ADDED : அக் 07, 2025 03:40 AM

கடலாடி: கடலாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கடும் வெயில் வாட்டி வரும் நிலையில் மழையை எதிர்பார்த்து விதைப்பதற்காக விவசாயிகள் உள்ளனர். விவசாயிகள் கூறியதாவது:
30 கிலோ கொண்ட கோ- 51, ஜோதி மட்டை, ஆடுதுறை உள்ளிட்ட விதை நெல் ரூ.1250க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெருவாரியான விவசாயிகள் நெல் மூடைகளை வாங்கி வைத்திருந்தாலும் மழை எப்போது பெய்யும் என்ற ஏக்கத்துடன் உள்ளனர். வானம் பார்த்த பூமியாக மானாவரி நிலங்கள் தான் அதிகளவு உள்ளது.
கண்மாயிலும் எதிர்பார்த்த நீர் வரத்து இல்லை. நிலத்தில் ஈரம் படிந்தால் உழுதுவிட்டு பின்னர் விதைப்பு செய்யலாம் என்ற கணிப்பில் உள்ளோம். இதுவரை மழை பெய்யாததால் சிரமமாக உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் நிலங்களை உழுது தயாராக வைத்துள்ளனர். வருண பகவானின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கிறோம் என்றனர்.