/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இ.சி.ஆர்., ரோட்டோரத்தில் சீமைக்கருவேலம் ஆக்கிரமிப்பு
/
இ.சி.ஆர்., ரோட்டோரத்தில் சீமைக்கருவேலம் ஆக்கிரமிப்பு
இ.சி.ஆர்., ரோட்டோரத்தில் சீமைக்கருவேலம் ஆக்கிரமிப்பு
இ.சி.ஆர்., ரோட்டோரத்தில் சீமைக்கருவேலம் ஆக்கிரமிப்பு
ADDED : பிப் 01, 2024 06:48 AM
ஆர்.எஸ்.மங்கலம், : இ.சி.ஆர்., ரோட்டோரத்தில் வளர்ந்து வரும் சீமைக்கருவேல மரங்களின் முட்புதரால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம், முத்து ரெகுநாதபுரம், சம்பை, திருப்பாலைக்குடி, உப்பூர், ஏ.மணக்குடி, புதுப்பட்டினம், தொண்டி பகுதிகளில் ரோட்டின் இருபுறமும் சீமைக் கருவேலம் அடர்ந்து வளர்ந்துள்ளன.
ரோட்டின் இருபுறமும் வளர்ந்துள்ள முள் புதர்களால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் உள்ளதால் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் வாகனங்களுக்கு வழி விட ஒதுங்கும் டூவீலர் ஓட்டுநர்கள் ரோட்டோரத்தில் உள்ள முள் செடிகளால் காயமடையும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
ரோட்டோரத்தில் உள்ள முட்புதர்களை புகார் எழும் நேரத்தில் மட்டும் அதிகாரிகள் பெரளவில் அகற்றுவதால் மீண்டும் மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து இடையூறு ஏற்படுத்துகின்றன.
எனவே ரோட்டோரத்தில் உள்ள கருவேல மரங்களை முழுமையாக அகற்றி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.