/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் கண்மாய்களில் சீமைக்கருவேலம் மரங்கள்.. அதிகரிப்பு ; கரையில் பனை விதைகள் நட விவசாயிகள் வலியுறுத்தல்

ADDED : ஏப் 07, 2025 06:38 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மழை பெய்துள்ளதால் விவசாய பாசனம், நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதாரமாக உள்ள கண்மாய்கள், ஊருணிகளில் நீர்பிடிப்பு, கரைப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. அவற்றை கோடை காலத்தில் அகற்றிவிட்டு கரையைப் பலப்படுத்தும் வகையில் பனை விதைகளை நட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 641 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 1122 சிறு பாசன கண்மாய்கள், 3897 ஊருணிகள் என 5660 நீர்நிலைகள் உள்ளன. பருவ மழை மற்றும் கண்மாய், ஊருணி நீரை பயன்படுத்தி 1 லட்சத்து 33 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்கின்றனர்.
மிளகாய் 50 ஆயிரம் எக்டேரிலும், இதே போல சிறுதானியங்கள், எண்ணெய் வித்து, பயறு வகைகள் சாகுபடி நடக்கிறது. இவ்வாண்டு மழை அதிகரிப்பால் கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் உள்ளது. அதே சமயம் கண்மாய் கரைகள், ஊருணி நீர்பிடிப்புகளில் நீரினை உறிஞ்சும் சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்துள்ளன.
தற்போது ராமநாதபுரம் பெரிய கண்மாய், எட்டிவயல் கண்மாய்களில் தண்ணீர் உள்ளது. மேலும் கோடை மழையை எதிர்பார்த்து 2ம் போக சாகுபடியாக பருத்தி, மிளகாய், சிலர் நெல் சாகுபடி செய்யவும் தயராகி வருகின்றனர். எனவே கண்மாய், ஊருணி கரைகள், நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
இதற்கு சம்பந்தபட்ட பொதுப்பணித்துறையினர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் வளராமல் தடுத்து கண்மாய், ஊருணி கரைகளை பலப்படுத்தும் வகையில் பனை மர விதைகளை அதிகளவில் நட்டு வளர்க்க வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
--