/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.7 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
/
இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.7 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.7 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.7 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
ADDED : செப் 27, 2024 03:04 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்த முயன்ற ரூ.7 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
மண்டபம் வடக்கு கடலோரத்தில் நேற்று மாலை இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு நாட்டுப்படகை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த சிலர் கடலில் குதித்து தப்பினர்.
படகை சோதனை செய்த போது மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 700 கிலோ கடல் அட்டைகள் இருந்தது. இதனை மண்டபம் வனத்துறையினரிடம் இந்திய வீரர்கள் ஒப்படைத்தனர்.
உணவு பயன்பாட்டிற்காக கடல் அட்டைகளை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்தனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சம். தப்பி ஓடிய கடத்தல்காரர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.