/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை, பார்த்திபனுாரில் ரூ.2.26லட்சம் பறிமுதல்
/
கீழக்கரை, பார்த்திபனுாரில் ரூ.2.26லட்சம் பறிமுதல்
ADDED : மார் 21, 2024 01:55 AM
கீழக்கரை: -கீழக்கரை அருகே சாயல்குடி சாலை கொம்பூதி விலக்கு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரவிச்சந்தர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கீழக்கரை சேர்ந்த வியாபாரி ஹமீது மகன் ஜாபீர் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த பணத்தை ராமநாதபுரம் கருவூலம் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
* பார்த்திபனுார் அருகே பிடாரிசேரியில், ராமநாதபுரம் உதவி வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன், தலைமையில், எமனேஸ்வரம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சாந்தி உள்ளிட்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது உசிலம்பட்டியைச் சேர்ந்த மொச்சாத் என்பவர் ரூ. 51 ஆயிரம் எடுத்துச் சென்றார்.
உரிய ஆவணங்கள் இன்றி இருந்ததால் அதனை கைப்பற்றி பரமக்குடி தாசில்தார் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

