/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜன.21ல் தொழில்பழகுநர் பயிற்சிக்கு தேர்வு முகாம்
/
ஜன.21ல் தொழில்பழகுநர் பயிற்சிக்கு தேர்வு முகாம்
ADDED : ஜன 16, 2026 05:21 AM
ராமநாதபுரம்: பிரதமரின் தேசிய தொழில்பழகுநர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம்- ராமநாதபுரம் அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் ஜன.,21ல் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ளது.
ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெறும் முகாமில் அரசு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம், வழுதுார் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம், தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு பணிமனை மற்றும் 50க்கு மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் நேரடியாக பயிற்சியாளர்களை தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே ஐ.டி.ஐ.,களில் பயிற்சி முடித்தவர்கள் நேரடியாக பங்கேற்று பயன்பெறலாம்.

