/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில சிலம்பம் போட்டிக்கு தேர்வு
/
மாநில சிலம்பம் போட்டிக்கு தேர்வு
ADDED : ஜன 10, 2025 04:47 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே உலையூரை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் பிரதீப் மாநில அளவிலான சிலம்பம் இரட்டைக்கம்பு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முதுகுளத்துார் அருகே உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர் பிரதீப் இரட்டைக்கம்பு போட்டியில் முதலிடமும், மாணவர்  குகன் ஒற்றைக் கம்பு பிரிவில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.
இதையடுத்து மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற பிரதீப் கலந்து கொள்ள உள்ளார். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் மற்றும் மாணவர் பிரதீப் ஆகியோரை தலைமை ஆசிரியர் அம்பேத்கார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

