ADDED : செப் 15, 2026 04:51 PM
பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கை கருத்தரங்கம் நடந்தது. தாளாளர் ரெங்கன் தலைமை வகித்தார். கல்விக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் நாகராஜன் வரவேற்றார். மத்திய அரசு வக்கீல் கோபிநாதன் பேசினார்.
அவர் பேசுகையில், தந்தை, தாய் மற்றும் ஆசிரியரை மாணவர்கள் போற்றி வணங்க வேண்டும். மாணவர் பருவத்தில் ஒழுக்கத்துடன், சிறந்த கல்வி கற்றால் மட்டுமே உயர்கல்விக்கு வழிவகுக்கும். இன்ஜினியரிங், டாக்டர்கள் மத்தியில் சட்டப்படிப்பின் தேவையும் அதிகரித்துள்ளது. வரும் ஏ.ஐ., யுகத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், பல்வேறு விதமான பிரச்னைகளும் உருவாக வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து அதற்கான ஆலோசனைகளும் அனைத்து தரப்பினருக்கும் தேவைப்படும். இதே போல் எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் சட்ட ஆலோசனைக்கு சிறந்த வல்லுனர்கள் தேவை உள்ளது. ஆகவே மாணவர்கள் சரியான துறையை தேர்ந்தெடுத்து போட்டி உலகில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்றார். மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
–––
