/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோழிகளை பாதுகாக்க கூண்டுகள் விற்பனை
/
கோழிகளை பாதுகாக்க கூண்டுகள் விற்பனை
ADDED : மார் 17, 2025 07:57 AM

திருப்புல்லாணி : - திருப்புல்லாணி அருகே சின்னாண்டி வலசை, தினைக்குளம், ரெகுநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி, சேவல் வளர்ப்பதற்கான கூண்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.1500, 2500, 3200 உள்ளிட்ட விலைகளில் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூண்டுகள் வடிவமைக்கப்படுகின்றது. மர அறுவை மில்லில் இருந்து வெட்டப்படும் ரீப்பர் கட்டைகளை கொண்டு கோழி கூடுகள் செய்யப்பட்டு அவற்றின் மீது இரும்பு தகரதால் கூரை அமைக்கப்படுகிறது.
விற்பனையாளர் பழனி கூறியதாவது: கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது உபரி வருமானத்திற்காக கோழி, சேவல் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். மரக்கூண்டுகளை பயன்படுத்தி அமைப்பதால் பாதுகாப்பாக இருக்கும். பாம்பு, கீரி உள்ளிட்டவைகளின் தொல்லையில் இருந்து அவற்றை பாதுகாக்கலாம்.
வீடுகளில் கோழி வளர்ப்போர் விரும்பி கேட்டு வாங்கிச் செல்கின்றனர் என்றார்.