ADDED : மே 13, 2026 04:16 AM
கீழக்கரை: மண்டபம், திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு போலி கலப்பட தேயிலை புழக்கத்தில் இருப்பதாக பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தன்னார்வலர்கள் கூறிய தாவது:
போலி கலப்பட தேயிலை பெரும்பாலும் பழைய தேயிலை கழிவுகளையோ, அல்லது செயற்கை வண்ணங்கள் கலந்து தயாரிக்கப் படுகிறது.
இதனை கண்டுபிடிக்க ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சம் தேயிலை போட்டு பார்த்தால் வண்ணம் உடனே தண்ணீரில் கரைந்தால் அது போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. உண்மையான தேயிலை மெதுவாகத்தான் வண்ணமாக மாறும்.
கலப்பட தேயிலை மூலம் தயாரிக்கப்படும் டீயை அருந்துவதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். அதில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணங்கள் செரிமான பிரச்னைகள் ஒவ்வாமை, கல்லீரல், சிறுநீராக பாதிப்பை ஏற்படுத்துகிறது. பயன்படுத்திய தேயிலையை மீண்டும் பயன் படுத்துவதால் அதில் பூஞ்சைகள் வளர வாய்ப்பு உள்ளது.
எனவே உணவு கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரிகள் போலி கலப்பட தேயிலையை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
