
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின கருத்தரங்கம் நடந்தது.மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் குப்பன், மாவட்டச் செயலாளர் மணிக்கண்ணு முன்னிலை வகித்தனர்.
ஓய்வூதியம் என்பது நன்கொடையோ, கருணைத்தொகையோ அல்ல, அது நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம். ஓய்வு பெற்றவர்களின் உரிமையாகும் என வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
ராமநாதபுரம் அன்னை கண் மருத்துவமனை டாக்டர் சந்திரசேகரன் பேசினார். மாவட்டப் பொருாளர் ராமச்சந்திரபாபு நன்றி கூறினார்.