ADDED : செப் 07, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியபட்டினம்: முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரியில் நிமிர்ந்து நில் திட்டத்தின் கீழ் உயர்கல்வி நிறுவனங்களுக்கான மேலாண்மை கூட்டம் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி செயலர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமை வகித்தார். மாநிலத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரின் பங்களிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ஹபீப் ரகுமான், சென்னை ஈ.டி.ஐ.ஐ., திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ், பேராசிரியர் ஐயப்பன் பங்கேற்றனர்.