/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தகவல் உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கு
/
தகவல் உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கு
ADDED : டிச 08, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மேலாண்மை துறை சார்பில் தகவல் உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். மேலாண்மைத் துறை தலைவர் மெய்கண்ட கணேஷ்குமார் வரவேற்றார். மாவட்ட இணை சுற்றுச்சூழல் அலுவலர் அனந்தநாராயணன் தகவல் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு அம்சங்களை மாணவர்களிடம் விளக்கினார்.
மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் திலீப்குமார் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மீண்டும் மஞ்சள் பை தேவையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மாணவர்களுக்கும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. பேராசிரியர் ஜெயபாலன் நன்றி கூறினார்.