ADDED : டிச 07, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலுார், விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு ராமநாதபுரத்தில் இருந்து இரண்டு கட்டங்களாகரூ.16 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலுார், விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் ராமநாதபுரத்தில் இருந்து முதற்கட்டமாக டிச.4ல் ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, கோதுமை, மளிகைப்பொருட்கள், பிரட், பிஸ்கட், பெட்ஷீட், தண்ணீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக நேற்று ரூ.8 லட்சத்து 17ஆயிரத்து 500 மதிப்புள்ள அரிசி, பருப்பு, மசாலாப்பொருட்கள், டீத்துாள் ஆகிய நிவாரணப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.