/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேவை குறைபாடுக்குரூ.ஒரு லட்சம் இழப்பீடு
/
சேவை குறைபாடுக்குரூ.ஒரு லட்சம் இழப்பீடு
ADDED : டிச 17, 2025 05:23 AM
ராமநாதபுரம்: மருத்துவக் காப்பீட்டை வழங்காத காப்பீட்டு நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் பச்சிவளையல்காரத் தெருவை சேர்ந்தவர் முகமது நிஷார். இவர் 2023 செப்.,1ல் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். இவரது மகன் முகம்மது ஜெபின் தனது குடும்பத்தினருக்கு கேர் ஹெல்த் நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு செய்துள்ளார்.
சிகிச்சையின் போது பணமில்லா காப்பீடு வழங்குமாறும், அறுவை சிகிச்சைக்கு பின் அதற்கான தொகையை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். காப்பீட்டு நிறுவனம் முகமது நிஷாருக்கு ஏற்கனவே இதய சம்பந்தமான நோய் இருப்பதை மறைத்ததாக கூறி விண்ணப்பத்தை நிராகரித்தது.இதனால் மனமுடைந்த முகமது ஜெபின்ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆணையத் தலைவர் பி.பாலசுப்பிரமணியம், உறுப்பினர் சா.குட்வின் சாலமோன்ராஜ் விசாரித்தனர். முகமுது நிஷாருக்கு ஏற்கனவே இதய சம்பந்தமான பாதிப்பு இருந்ததற்கான ஆதாரங்களை காப்பீட்டு நிறுவனம் தாக்கல் செய்யவில்லை. அதனால் சிகிச்சைக்கான காப்பீட்டு தொகை ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 975 வழங்க வேண்டும்.
பணமில்லா காப்பீட்டிற்கு விண்ணப்பித்தும், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது விண்ணப்பத்தை நிராகரித்ததை ஏற்க முடியாது. அதனால் ரூ.1 லட்சம் இழப்பீடு, வழக்கு செலவிற்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

