/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதிய தண்ணீர் இன்றி கருகும் எள் செடிகள்: விவசாயிகள் கவலை
/
போதிய தண்ணீர் இன்றி கருகும் எள் செடிகள்: விவசாயிகள் கவலை
போதிய தண்ணீர் இன்றி கருகும் எள் செடிகள்: விவசாயிகள் கவலை
போதிய தண்ணீர் இன்றி கருகும் எள் செடிகள்: விவசாயிகள் கவலை
ADDED : மார் 17, 2024 11:45 PM

முதுகுளத்துார் : முதுகுளாத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள எள் செடிகள் போதிய தண்ணீரின்றி கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிளகாய்,பருத்தி உள்ளிட்ட சிறுதானிய சாகுபடி நடக்கிறது.
நடப்பாண்டில் பருவமழை நேரத்தில் பெய்த மழையினால் ஏராளமான பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முழுவதும் வீணாகியது. நெல் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது.
தற்போது குறுகியகாலப் பயிர்களான குறைவான தண்ணீரில் வளரக்கூடிய எள் செடிகள் பயிரிட்டுள்ளனர்.
அவை நன்கு வளர்ந்து வந்த நிலையில் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேரிருவேலி, மட்டியரேந்தல், தாளியரேந்தல் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்டுள்ள எள் செடிகள் பூ பூத்த நிலையில் நீரின்றி கருகியுள்ளன. வேறுவழியின்றி சில விவசாயிகள் அறுவடை செய்கின்றனர். நெல், மிளகாய், எள் சாகுபடியில் நஷ்டமே மிஞ்சியது.
எனவே இனிவரும் காலங்களில் நீர்நிலைகளை ஆழப்படுத்தி மழைநீரை தேக்கி வைத்து பயிர்களுக்கு பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

